கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகளுக்குக் காரணம் என்ன?ஆசிரியர் வாரிய தலைவர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2019

கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகளுக்குக் காரணம் என்ன?ஆசிரியர் வாரிய தலைவர் விளக்கம்


கணினி ஆசிரியர் தேர்வில் ஒரு சில இடங்களில் நடந்த குளறுபடிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆசிரியர்தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளார்.

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி பாடப்பிரிவுக்கு 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக முதுநிலை ஆசிரியர்பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 25,500பேர் தேர்வில் பங்கேற்றனர். பல இடங்களில், தேர்வர்களுக்கு கணினியைஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், போதிய கணினிகள் இல்லாததால், சில இடங்களில் தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இதுதவிர சர்வரில் பிரச்னை, தேர்வு மைய முகவரியை சரியாக அச்சிடாதது என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலையில், சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் கூட்டாக சேர்ந்து விவாதித்தும், செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு விடைகளைக் கேட்டு எழுதியாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோக்கள் தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வர்கள் காப்பியடிப்பதுபோன்றும், தேர்வு மையத்தில் கூச்சல் குழப்பமாக இருப்பது போன்றும் விடியோ கட்செவி அஞ்சலில் பரவியது. இதைக் கண்டித்து சில மாவட்டங்களில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வெழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வை முடிக்க முடியாதவர்களுக்கு அதை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

 சர்ச்சை விடியோவுக்கு விளக்கம்:

இந்த நிலையில், கணினி ஆசிரியர் தேர்வு விவகாரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் திங்கள்கிழமை விளக்கமளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அகில இந்திய அளவில் இணையவழியில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்வு நாளன்று எதிர்பாராத விதமாக சரிசெய்ய இயலாத அளவில் கணினி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் நிலையில் அந்தத் தேர்வு மையத்துக்கு மட்டும் தேர்வினை ரத்து செய்து மறு தேர்வு நடத்துவதற்குஅறிவிப்பு வெளியிடப்படுவது பொதுவாகவேவழக்கத்தில் உள்ளது. இதற்கு முன்னர் தேசிய அளவிலும் தமிழகத்திலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டுள்ளன.

கணினி ஆசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சர்வர் பிரச்னை காரணமாக தேர்வு ரத்தான பின்புதிருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி மையத்தில் விடியோ எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்லிடப்பேசி அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றார் அவர். 1,221 பேருக்கு ஜூன் 27-இல் மறுதேர்வுதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட மூன்று மையங்களில் மட்டும் வரும் 27-ஆம் தேதி கணினி ஆசிரியர் தேர்வுக்கு மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறியது: தேர்வு நடைபெற்ற 119 மையங்களில் திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த மூன்று மையங்களில் தேர்வு எழுதிய1, 221 பேருக்கு மட்டும் வரும் 27-ஆம் தேதி வியாழக்கிழமை மறுதேர்வு நடைபெறும். தேர்வு மையம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச்சீட்டு ஆகிய விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இதையடுத்து கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மையத்தில் 944 பேர், அன்னை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில்118 பேர், கொங்குநாடு பொறியியல் கல்லூரி மையத்தில் 159 பேர் என 1,221பேர் மீண்டும் தேர்வெழுதவுள்ளனர்.

9 comments:

  1. முழுபூசணிக்காயை மறைத்த காலம் போய் digital உலகில் முழு பூமியையே மறைத்து பேசினாலும் வியாபாரத்திற்காக
    அதையும் breaking news ஆக போடக்கூடிய multimediaஉலகம்
    என்ன செய்வது....
    அதெப்படி exam பெயர் online..
    Exam time----+10 to 1
    ஆனா
    இஷ்டத்துக்கு offlineனிலும் எங்கள் வசதிக்கு ஏற்ப
    Examஐ 1:00 to 3 (or)
    2:00 to 5 னு வைப்போம்..
    இதையும் online test என்று சொன்னாலும் நம்பி கட்டின exam feesக்கு உட்கார்ந்து வரவேண்டும்...
    ஏனெனில்
    இது
    ஏமாற்றத்தெறிந்த digital india,
    இது
    அதிகாரத்தில் அறிவார்ந்த intelligent இருக்கும் india,
    இது
    கண்ணைமூடிக்கொண்டு இருக்கும் நீதித்துறை கொண்ட india...
    நல்லா நடத்துங்க....

    ReplyDelete
  2. My dear friends careersfly.in offers best job in India and abroad. Is it fake or real kindly confirm me.

    ReplyDelete
  3. After cancellation of the examination how the questions are displayed on the screen,is it possible,or they are playing?

    ReplyDelete
  4. டேய் கேன வெங்கடேஷ் இந்த தவறு வரும்னு ஏற்கனவே எல்லாருக்கும் தெரியும். உனக்கு தெரியாத. இப்போ கேஸ் போட்டு 2 வருடம் இழுதடிக்க வைப்ப. சிறப்பசிரியர்கள் மாதிரி. அறிவு கேட்ட முண்டமே Pg trb -யை omr முறையில் வை. இப்போ நா திருந்து.

    ReplyDelete
  5. Create complaint in cm online petition please. Every one make . Omr for PG Trb.

    ReplyDelete
  6. தகுதியான ஆசிரிரை தேர்ந்தெடுப்பது தான் அரசாங்கத்தின் உண்மையான நட வடிக்கை என்றால் இந்த தேர்வை மீண்டும் மறு தேர்வு அறிவித்து எந்த குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டும்.K.S.R. COLLEGELA எந்த குளறுபடியும் நடக்கல என்றால் camera onla iruthatha illaiya exam start to system promblem ahgaravaraikum என்ன நடந்ததுது என்று அரசாங்கமும் நீதிமன்றமும் விசாரிங்க.சரி system servar problem ok அதை சரி செய்ய உள்ள Seinior superior irukanga governent step edukum ok ஆனா வெளிய இருந்து உள்ள ஆட்கள் எப்படி வந்தாங்க Yan Allow panniga தேர்வர்கள் தேர்வு நேரத்தில் Yan discussion pannaga mobile eppadi allow pannaga system problem ahnalumkuda ellaraiyum உள்ள அனுமதித்தது முறைகேடு தானே. Discuss panna vittu irukakudathu இரவு பகல் சிரமம் பட்டு படிச்சவங்க எல்லாரும் அப்ப முட்டாளா என்ன?அப்ப படிக்காம Discuss panni எழுதி மார்க் வாங்கிட்டு போய்டுவாங்களா. இதனால படிக்காதவன் திறமை இல்லாதவன் உள்ள போவாங்க Jobku படிச்சவ சதியால வேலை கிடைக்காம. வெளியே இருப்பாங்க.இந்த தவறை நீதி மன்றம் வாசாரிக்க வேண்டும்.என்ன தவறு நடந்தது.Campus உள்ள Public ஐ யாரையும் அனுமதித்து இருக்க கூடாது. நீதி மன்றம் சரியான முடிவு எடுத்து Discuss. Panni எழுதன தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்.ugc condact pannara net exam online test 2 yearla entha server problem vanthathu illa.but state goverment examla eppadi server problem server problem endral exam cancel pannitu throw tamilnadu veroru nall exam vaithu irukalam.

    ReplyDelete
  7. Ellam waste OMR method is best.online exam ellam fraud omr sheet vaithu check pannavum mudiyathu.

    ReplyDelete
  8. Omr sheet same time same question paper no chance for fraud exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி