அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம் மத்திய மந்திரி பரிந்துரை - kalviseithi

Jun 12, 2019

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம் மத்திய மந்திரி பரிந்துரை


அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாகஇடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் திட்டவரைவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இத்தகவலை ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். இந்த திட்டவரைவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அப்படி கிடைத்தால், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பாடத்திட்டத்தில் யோகா இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடக்கும் முக்கிய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். உலகம் முழுவதும் இருந்துயோகா குருக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள்என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி