ஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவிஉயர்வு - kalviseithi

Jun 12, 2019

ஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவிஉயர்வு


மாவட்ட கல்வி அதிகாரிகள், ஏழு பேருக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி என்ற, டி.இ.ஓ.,க்கள் ஏழு பேருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என்ற, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

1.நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலராக இருந்த எ.தியாகராஜன், திருவாரூர் முதன்மை கல்வி அலுவலராகவும்,

2.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.குணசேகரன், நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலராகவும்,

3.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், கரூர் முதன்மை கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

4.தேனி மாவட்ட கல்வி அலுவலர் பி.என்.கணேஷ், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராகவும்,

5.சென்னை (மேற்கு) மாவட்ட கல்வி அலுவலர் பி.எ.ஆறுமுகம், கடலூர் முதன்மை கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

6.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்விஅலுவலர் எம்.ரத்தினச்செல்வி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

7.தர்மபுரி மாவட்டம், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.சுப்பிரமணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

இந்த அரசாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. So happy all the best pls give me reputation or transfer to my district iam suffering with out my salary

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி