தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு - kalviseithi

Jun 2, 2019

தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு


தமிழகத்தில் கடுமையான வெயில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.கத்திரி வெயில் காலத்தில் மட்டுமல்லாது கடந்த 4மாதங்களாகவே தமிழகத்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

பல இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. பருவமழை காலத்தில் சரிவர மழை  பெய்யவில்லை.இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சென்னை நகரில் தண்ணீருக்காக குடங்களுடன் மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாளை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடும் வெயில், தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் கடும் வெயில் காரணமாக நாளை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

37 comments:

 1. One week appuram school open Panna veyyil commi aayituma

  ReplyDelete
 2. School la late ta open pannuga

  ReplyDelete
 3. Indha veyil la school Ku poradhu kastam

  ReplyDelete
 4. மாணவர்களுக்கு கஷ்டமில்லை. ஆசிரியர்களுக்குதான் கஷ்டம்

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு லீவு விட்டாலும் பத்தாது.

   Delete
  2. Konjamachum arivoda pesaraya romba pudhisali nu nenapu working day onnudha leave vitalum Saturday working day vaipaga unoda paiyana private school la sethirupa adha Indha vai pesara jolly ah ac bus la vandhu pickup panitu poitu drop panuvaga school pona nekudukara fees ku snacks cooldrink nu kudupaga gov school pasaga apadiya veyil la nadandho or cycle la varanum

   Delete
  3. Nee mudalla un pillaya, nee govt vela patha govt Scl la sethutu aparama pesu.

   Delete
  4. Saturday working day vaja 12.30 ku Scl mudijutu neenga kilampurathellam theriyum public ku

   Delete
 5. Please..! Two week apparam school reopen panna romma nalla irukkum
  So , veppa salanam rommbave athikamaga irukkirathu ithanala students & teachers pathikkappatuvanga
  Athumattumillamal 1 to 8 students pet period iruntha nilaimai mosam akidum

  Water problem sarippannalum childs water head akidum ithanala problem
  So ,please two or one week later reopen 🤒🤒

  ReplyDelete
 6. Sir, important news mela 👆🖕sollama vittai athu ennanna students ah irukkaddum teachers ah irukkattum kalailla busla yeri oru 3 hours or 2 hours oh illa more time travel panni schoolkku vanthu saptu prayer 9:30 start panni 10:00 stop panni class room pora antha 30 minute romma romma kastem so. Two week later schools reopen better

  ReplyDelete
  Replies
  1. Govt staff wrk panra oorla than erukanum antha govt rule theryuma?

   Delete
  2. Velivurla irunthu vadaikaikku thanki irukkuravungka? Ungkalukku kastem puriyutha illaya sir ?

   Delete
 7. ஒரு வாரம் குடும்ப கதைகளை பேசுவதிலேயே போய்விடும்.. அப்புறம் நீயா நானா போட்டி துவங்கிவிடும்..

  ReplyDelete
 8. 10ம் தேதிக்கு மேல் திறந்தாலும் வெயில் குறையப் போவதில்லை..

  அது மட்டுமில்லாமல்.. சனிக்கிழமை பள்ளி வைக்க வேண்டி வரும்..

  அதற்கு நாளையே பரவாயில்லை.

  ReplyDelete
 9. தயவுசெய்து நாளை ஒருநாள் மட்டும் லிவு விடுங்க pls

  ReplyDelete
 10. மாணவர்கள் எப்போது பள்ளிக்கு வருகிறார்களோ அப்போதுதான் புண்ணியம் பெருகி மாரி பொழியும் என்று கலிபுராணம் சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Biometric vanthalum 9.00 maniku fingering vajutu poi staff room la sapdurenu 10.30 mani varai cls ku poga matanga athayum konjam paarunga.

   Delete
  2. I think u r under depression due to unemployment

   Delete
  3. Govt school வேலையில் இருப்பார் ஜீ. அதான் நிலவரம் தெரியுது அவருக்கு

   Delete
  4. Nadakuratha sonna epdi than erukum

   Delete
 11. டே அன்நெளன் மூதேவி பேர போட்டு கமெண்ட் பண்ணு

  ReplyDelete
 12. உண்மைய சொல்ல பேர் தேவையில்லை

  ReplyDelete
 13. திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை. நாளை விடுமுறையா??????????????

  ReplyDelete
 14. இது ஒரு சரியான கேள்வி

  ReplyDelete
 15. Innum malaikalam start akala.

  ReplyDelete
 16. Mr. Sel I think nega yedho kalatra vela seiyara person ah irupiga Pola cha ivlo correct ah soilriga correct ah kalatra velaya seiyariga government vela kedaika web site la vandhu kathitu iruku pavam yaru petha pullanu theriyala

  ReplyDelete
  Replies
  1. Unmaya sonna unaku valikutha vela ellatha nee vanthu pathiya una mathiri ellarayum ninakatha.neeyum yaaru petha pullayo.

   Delete
 17. நாளை கலைஞர் பிறந்தநாள்

  ReplyDelete
 18. பள்ளி திறக்கும் நாள்

  ReplyDelete
 19. http://forteachersvpm.blogspot.com/2019/06/complete-study-materials-amd-textbooks.html

  ReplyDelete
 20. appo nalaikku school poithan aganuma, sari kilambi tholaiyiren

  ReplyDelete
 21. ஆரம்ப கால ஆசிரியப் பெருமக்களை மதியாதோர் இக்கால ஆசிரியர்களை குறை கூறுவர்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி