புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பிக்க முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு - kalviseithi

Jun 11, 2019

புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பிக்க முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு


புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 1 முதல் பிளஸ்2 வரையில் உள்ள பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த கல்வியாண்டில் முதற்கட்டமாக 2018-19ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 2019-2020ம் கல்வியாண்டில் 2, 3, 4, 7 8 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ பள்ளி பாடத்திற்கு இணையாகவும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ளவும், புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 12ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயிற்சி வழங்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள வகுப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ்2 வகுப்புக்கு பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் வரும் 17ம்தேதி நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி பயிற்சி தொடங்கி அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், தவரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை முழுமையாக ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர். 

1 comment:

  1. நோபல் பரிசு பெறும் பொருளியல் பாடம் எங்கும் குறிப்பிட தாமதம்... ????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி