அறிவிப்பு பலகையில் கல்வி கட்டண விவரங்கள்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு - kalviseithi

Jun 11, 2019

அறிவிப்பு பலகையில் கல்வி கட்டண விவரங்கள்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு


தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையிலேயே மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இந்தநிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகள் கட்டண விவரம் குறித்து பள்ளி நுழைவாயில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:  தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவாயிலில் கட்டண விபரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.

மேலும், கல்விக் கட்டண நிர்ணயக்குழு பரிந்துரை அடிப்படையில் கட்டணங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி