CPS - ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை குறித்த விபரங்களை, நாளை முதல், இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

CPS - ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை குறித்த விபரங்களை, நாளை முதல், இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.


தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை குறித்த விபரங்களை, நாளை முதல், இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு பணியாளர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் என, 4.66 லட்சம் பேர் உள்ளனர்.அவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்த விபரம், அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டு, cps.tn.gov.in/public என்ற, இணையதள முகவரியில், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில், மாதாந்திர சந்தா தொகை, வட்டி, இறுதி இருப்பு மற்றும் கணக்கு தாள்களை, நாளை முதல், சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2 comments:

  1. It's just an another sheet of paper .You can't do anything with it. You can't even br sure that the amount in the sheet will be given to you after the retirement. That's what CPS is

    ReplyDelete
  2. CPS அரசு ஊழியர்,ஆசிரியர்களை ஏமாற்றும் திட்டம்.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! நம் தமிழ்நாட்டிலே!!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி