TNTET' தேர்வு 2019 - ஹால் டிக்கெட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2019

TNTET' தேர்வு 2019 - ஹால் டிக்கெட்டில் சான்றொப்பம் பெற உத்தரவு



''ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,'' என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வு நுழைவு சீட்டினை இணையதளத்தில் 'டவுண்லோடு' செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில்,கையெழுத்தை மட்டுமே பதிவேற்றியுள்ளனர். எனவே இவர்களது ஹால் டிக்கெட்டிலும் புகைப்படம் இருக்காது. புகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம்சான்றொப்பம் பெற வேண்டும்.

மேலும் கூடுதலாக ஒருபுகைப்படத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, வருகை பதிவேட்டில் ஒட்டி, கையெழுத்திட வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தமது புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

26 comments:

  1. புகைப்படம் இருந்தா தேவை இல்லை யா

    ReplyDelete
    Replies
    1. Itharkku pathil yaru tharuvaaaa.....??? Bcz enakkum ithaeee santhegam.....!!!!??

      Delete
    2. கஷ்டப்பட்டு படித்து படித்து 2013-ல பாஸ் பண்ணி 2017 ல பாஸ் பண்ணி இப்போ 2019 ல பாஸ் பண்ணி வாழ்க்கையை மாற்ற போகிறதா? இந்த தேர்வு? இப்படியே ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? இதில் வேறு வேலை பார்த்துக்கொண்டு திருமணமாகி குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருப்பவர்களும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிக்கு ஒரு புறம் அனுப்பிவிட்டு (அரசு சார்பில்) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யப் போகிறோம்?

      Delete
    3. இப்படியே நாம் 58வயதுவரை இருக்க வேண்டும். இது தான் அரசு நோக்கம்...

      Delete
  2. Dear kalviseithi admin. தலைப்பு பாத்தா முழு தகவலும் புரியனும் அது மாதிரி செய்தி போடுங்க தோழரே.

    ReplyDelete
  3. 2017tet pass Candidate Ku job varuma

    ReplyDelete
  4. Is any Whatsapp group for pgtrb maths???

    ReplyDelete
  5. தலைப்பை பார்த்ததும் பதட்டம்/கோபம் அடைய வைக்க வேண்டாம்...

    ReplyDelete
  6. 2017 tet pass candidates ug trb yezhutha mudiyumaa

    ReplyDelete
  7. பயமுறுத்துவது போன்று தகவல் தராதீர்கள்

    ReplyDelete
  8. Replies
    1. Photo ulla etho oru records eduthu poganumameeeee....like athar card,licens...etc.(.hallticket la photo iruntha kooda..)

      Delete
  9. Initial print ஆகலனா என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. If u have tension go Along with ur application print to center

      Delete
    2. Ssss....ennoda name la initial print aagala ....enna seivathu....

      Delete
  10. Pass panavangalukum velai illa
    Exam eluthiyavathu vaikalanu
    Apply pannuna ithukum ithana rules velangirum

    ReplyDelete
  11. Initial is not print in the hall ticket Is it any problem? If it's a problem what can I do? Please anyone reply me

    ReplyDelete
  12. All students has been joining in private schools.the government also given approved to private.For what conduct yet exam,everything waste

    ReplyDelete
  13. Dey heading eppadi poodanumnu therinchukittu podungada loosu pasangla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி