TRB - ஜூன் 23-இல் கணினி ஆசிரியர் தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2019

TRB - ஜூன் 23-இல் கணினி ஆசிரியர் தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு


தமிழகத்தில்  வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அண்மையில் அரசாணை வெளியிட்டது.இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தப் பதவிக்கு, ஆன்லைன் வழி கணினிதேர்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத்தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  தேர்வர்கள் பயனியர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை,  விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை  எடுத்துவரவேண்டும். தேர்வு நாளான ஜூன் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. PG TRB CHEMISTRY MATERIALS AVAILABLE CONTACT NUMBER.9629711075

    ReplyDelete
  2. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

    ReplyDelete
  3. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri
    Contact : 9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி