தேர்தலில் பணிபுரிய அலுவலர்களுக்கு 14ல் முதற்கட்ட பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2019

தேர்தலில் பணிபுரிய அலுவலர்களுக்கு 14ல் முதற்கட்ட பயிற்சி!


வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 690 இடங்களில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 7,576 அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி வரும் 14ம் தேதி தொடங்குகிறது.மாவட்டம் முழுவதும் 6 பயிற்சி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடத்தப்படுகிறது.

அதாவது வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரி உட்பட 6 இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக இப்பயிற்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரத்தை எவ்வாறு தயார் செய்து வைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி