பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - kalviseithi

Jul 18, 2019

பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்படிப்பு உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


கல்லூரி கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் நேற்றுவெளி யிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர்களின் மேற் படிப்புக்காக திறன் அடிப்படை யிலான உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு உதவித்தொகைக்கு விண் ணப்பித்து தேர்வுசெய்யப்பட்ட வர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உதவித் தொகைதொடர்பான மத்திய அர சின் வழிகாட்டு நெறிமுறை களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி