மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2019

மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலை


மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இதுவரை இடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன்மூலம் கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலை ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்பட்டன.

இந்த ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த திருச்சியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவிக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அதுவும்சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளில் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (453) எடுத்தவர். ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்து இருக்கின்றன என்ற பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட அரசு தயங்குவது ஏன்? என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 8 பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைத்தன.

அதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அரசு சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவ-மாணவிகளில் எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து இருக்கின்றன? என்பதும் ரகசியமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி