ஜாக்டோ-ஜியோ - ஜூலை 7-ந் தேதி போராட்டம் சென்னையில் நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

ஜாக்டோ-ஜியோ - ஜூலை 7-ந் தேதி போராட்டம் சென்னையில் நடக்கிறது


பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடந்தது. முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவின் 9 அம்ச கோரிக்கைகள் நேற்று நடந்த பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கையில் இடம்பெறுமா என்று அதன் நிர்வாகிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் வராததால், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ-ஜியோநிர்வாகிகளை, முதல்-அமைச்சர் அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைரத்து செய்ய வேண்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியனை பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

 1. செவிடன் காதில் சங்கூதுவது போல இருக்கும்.....


  ஜெயக்குமார்.....சொல்வார்....

  அரசு ஊழியர்கள் நல்ல சம்பளம் வாங்கி அதிகமாக சாப்பிட்டதால் ஜீரணம் ஆக வேண்டி உண்ணா விரதம் இருக்கிறார்கள் என்று....

  ReplyDelete
 2. கண்டிப்பாக தேவை

  ReplyDelete
 3. அரசு ஊழியர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி