CEO, DEO, DEEO க்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

CEO, DEO, DEEO க்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு, திண்டிவனத்தில் பள்ளி வாகனம் பின்னால் வந்தபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை யுவஸ்ரீ உயிரிழந்தது. இந்த விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும்,ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் தாய் அஞ்சலி தேவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், திண்டிவனத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி தாளாளருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை குழந்தையின் தாய்க்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி