போலீஸ், தீயணைப்பு, சிறை துறையில், 8,888 பணியிடங்களுக்கு, ஆக., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
இதற்காக மாவட்ட, மாநகரங்களில், மையங்களை தயாராக வைத்திருக்க, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.எஸ்.பி., மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழக போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைகளில், காலியாக உள்ள, 8,888 பணியிடங்களுக்கு, ஜூலை, 14ல், எழுத்துத் தேர்வு நடக்கவிருந்தது; நிர்வாக காரணத்தால், ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, ஆக., 25ல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு உள்ள துணை குழுக்கள், ஆக., 5க்குள், மையங்களை ஆய்வு செய்து, அறிக்கை தரவேண்டும். மையங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.மொத்தம், ௮,௮௮௮ காலி பணியிடங்களுக்கு,4.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு, 1,245 மையங்களில், ஆக., 25ல் தேர்வு நடக்க உள்ளது. ஆக., 10 முதல், அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப்படும். ஆன் லைனிலும், அனுமதி சீட்டுகளை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Pg Trb economics WHATSAPP group 9600640918
ReplyDelete