தேர்தல் பயிற்சிக்கு வராத 937 பேருக்கு, 'நோட்டீஸ்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2019

தேர்தல் பயிற்சிக்கு வராத 937 பேருக்கு, 'நோட்டீஸ்'


தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராத, 937 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

வேலுார் லோக்சபா தேர்தல், ஆக., 5ல் நடக்கிறது. இதற்காக, 1,553 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் பணியாற்ற, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 7,757 பேர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பயிற்சி முகாம், 14ல், ஆறு இடங்களில் நடந்தது. இதில், 937 பேர் பங்கேற்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு, 937 பேருக்கும், கலெக்டர், சண்முகசுந்தரம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

அதில், 24 மணி நேரத்தில், விளக்கம் அளிக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு, அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால், பணியிட மாற்றம் செய்யப்படுவர் என, தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

1 comment:

  1. வராதவர்களுக்கு கையெழுத்து போட்டு காப்பாற்றிய சக போர்ஜரீசிரியை களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி