மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2019

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

செய்தி வெளியீடு:-.                    
மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.பிரபாகர் 

இ.ஆ.ப ஆலோசனை மற்றும் உத்தரவின்படி கிருஷ்ணகிரியில் 10 ஒன்றியங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

08.07.2019 முதல் 19.07.2019  வரை மாற்றுத்திறன் மாணவர்களுங்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்

இடம்:-வட்டார வள மையங்கள் (பி.ஆர்.சி வளாகம்)

நேரம்:- 9மணி முதல் 1 மணி வரை

குறிப்பு: மாற்றுத்திறன்  அடையாள அட்டை  மற்றும் உதவி உபகரணங்கள் பெற தேவையான ஆவணங்கள்.

1. ஆதார் அட்டை நகல் -1
2. பாஸ்போர்ட் அளவு
 புகைபடம் - 4
3. வருமானச் சான்றிதழ் நகல்-1
4. ரேஷன் அட்டை நகல் -1
5. தலைமையாசிரியரிடம் சான்று(படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்)
6.மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புத்தகம் நகல் -1

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள்  பள்ளிகளுக்குட்பட்ட  குடியிருப்பு பகுதிகளில் தகவல் தெரிவித்து எந்தவொரு 0-18 மாற்றுத்திறன் குழந்தைகளும் விடுபடாமல்  மருத்துவ முகாமில் கலந்து கொண்டு  பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு , தேநீர் பிஸ்கட் , மற்றும் 150 பேருக்கு போக்குவரத்து படி 150 பேருக்கு × ₹.30 =₹.4500 வழங்கப்படும்

அந்தந்த ஒன்றியத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மற்றும் 0 - 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் மாணவர்களை பங்கேற்க செய்து அடையாள அட்டை , உதவி உபகரணங்கள் , அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி.நடத்தப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வி.ராஜேந்திரன் 97888 58724 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் திரு.ஜே.அருண்குமார் 98940 70636 ஆகியோரை தொடர்பு கொண்டு 0 - 18 வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களை மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து அனைத்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைய செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி