அரசு பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு நிதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2019

அரசு பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு நிதி


எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில்அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.

வறட்சியால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முழுமையாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை நிவர்த்தி செய்ய அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, சட்டசபை தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் வீதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அடிப்படை உட்கட்டமைப்பு தேவைப்படும் தலைமை ஆசிரியர்கள் தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.,க்களும் பாரபட்சமின்றி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளைகண்டறிந்து, நிதி ஒதுக்கி, பள்ளி வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி