தமிழ் படிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

தமிழ் படிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் படிக்காதவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர், பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாய தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற, நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது.ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல், தமிழ் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, பள்ளி கல்வித் துறைக்கு, மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நாகராஜமுருகன், சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.அதில், சட்டத்தை பின்பற்றி பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள்மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அரசின் பணி நிபந்தனை விதிகளின் படி, தமிழ் மொழி படிக்காத ஆசிரியர்கள் மீது, சஸ்பெண்ட்உள்ளிட்ட நடவடிக்கைகள் வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Manangetta polappu..
    10th 12th la tamil padiklalana avana en sekkanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி