ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு


ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக,யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆலோசனைஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த, பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது.

'ஒரு பல்கலையில், முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலையில், தொலைநிலை மூலம், மற்றொரு பட்டப் படிப்பை படிக்க அனுமதிக்கலாம்'என, அந்த குழு ஆலோசனை வழங்கியது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் செயல்பட்டு வரவில்லை.முதல் கூட்டம்இந்நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகள் படிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., துணைத்தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான இந்தக் குழு, கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டமும்நடந்துள்ளது.

இது குறித்து, யு.ஜி.சி., அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாணவர் விருப்பம்தொலைநிலை, அல்லது பகுதி நேரமாக, ஒரு பல்கலையில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது மற்றொரு பல்கலையில், மற்றொரு பட்டப் படிப்பை படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து, இந்தக் குழு ஆய்வு செய்கிறது. வழக்கமான பட்டப் படிப்புடன், சிறப்பு அல்லது தனி திறன் பட்டப் படிப்பையும் படிக்க, மாணவர்கள்விரும்புகின்றனர். அதனால், இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

3 comments:

  1. padicha degree ku velai ila..apuram ethuku oreatime la dual degree..?so dual degree ngra pearla kaasu sampathika ithu oru nala kuruku vazhi..

    ReplyDelete
  2. Evanum pg degree regular la padika matan, direct ah b.ed sendhutu corress la m.a msc seruvan.
    Regular la pg padikira pasangaluku scope athigam agum
    Nalla visayam than

    ReplyDelete
  3. Thiramai erukku patikkuran Athunala ellarukkum thiramai illanu solla mutiyathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி