''ஜாக்டோ - ஜியோ விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டசபையில்விவாதிக்க இயலாது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தி.மு.க. - தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட 1990 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்; ஏராளமானோர் பணி இடமாறுதல் செய்யப் பட்டுள்ளனர்;பலருக்கும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். அவர்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும்.
அமைச்சர் ஜெயகுமார்:
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து சபையில் விவாதிக்க முடியாது.இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி