அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2019

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுற்றறிக்கை


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 அடுக்கு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த குழுக்கள் அரசு பள்ளிகளில் 20 உறுப்பினர்களை கொண்ட மேலாண்மைக்குழு அமைத்திட வேண்டும் என சுடலைக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலாண்மை குழுவினர், புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களின் வருகைப் பதிவை தக்கவைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வட்டிக்கு விடக் கூடாது என்றும் ஆணையிட வேண்டும்.. டியூசனை விட வட்டிதொழில் அமோகமாக நடக்கிறது..

    ReplyDelete
  2. 🤣😂😃இது எல்லா நடக்கிற காரியமா

    ReplyDelete
  3. Govt.old pension scheme kondu varuma? CPS amountla irunthu loan poda mudiyala, atha yaravathu kapingala?

    ReplyDelete
  4. Just like all officials should not do any business except their job work to earn money

    ReplyDelete
  5. Govt Vakkil,govt doctor,,,enna pathil

    ReplyDelete
  6. Hm கள் டியூசன் எடுக்கலாமா?

    ReplyDelete
  7. இதே போல் அரசு மருத்துவர்கள் தனியார் தனியார் மருத்துவமனை நடத்தக்கூடாது தனியார் மருத்துவமனையில் பணி புரிய கூடாது என்று உத்தரவு போடலாமே.போங்கடா மானங்கெட்ட நாய்ங்களா

    ReplyDelete
  8. Lab Assistant second list என்ன ஆனது ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி