கட்டாய கல்வி கட்டணம்: வழங்க அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2019

கட்டாய கல்வி கட்டணம்: வழங்க அரசு உத்தரவு


தமிழகத்தில், 2017 ஆக., 11க்கு முன், சுயநிதி கல்வி நிறுவனங்களின், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டாய கல்வி கட்டணத்தை, முழுவதும் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ - மாணவியருக்கு, 2010 - 11ம் கல்வியாண்டு வரை, அரசு கல்வி நிறுவனங்களில் விதிக்கப்படும் கட்டண அளவிற்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.கடந்த, 2011 - 12 முதல், சுயநிதி கல்வி நிறுவனங்களில், நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கும், கல்வி கட்டணம் முழுவதையும், உதவித் தொகையாக வழங்க, ஜெயலலிதா உத்தரவிட்டார்.ஆனால், சில சுயநிதி கல்வி நிறுவனங்கள், கல்வி உதவித்தொகை திட்டத்தில், முறைகேடு செய்வதாக, புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கல்வி உதவித் தொகையை, அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தரப்படும்தொகைக்கு மிகாமல் வழங்க, 2017ல், தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில்,2017 - 18ல், சுயநிதி கல்வி நிறுவனங்களின், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், பழைய முறைப்படி, கட்டாய கட்டணங்கள் அனைத்தையும் வழங்க, அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். அதை ஏற்று, 2017 ஆக., 11க்கு முன், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தை முழுவதுமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி