பள்ளிகளில் அமலுக்கு வராத சிறப்பாசிரியர் பாடத்திட்டம்... - kalviseithi

Jul 29, 2019

பள்ளிகளில் அமலுக்கு வராத சிறப்பாசிரியர் பாடத்திட்டம்...


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளி கொண்டு வரும் பொருட்டு சிறப்பாசிரியர்கள் நியமிக்கபட்டனர். இவர்கள் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

இந்த பாடங்களுக்கென தனியாக பாடத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததையும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாட இணை செயல்பாடுகளுக்கு பிரத்யேக பாட திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஆசிரியர்கள் உள்ளடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதில், பல்வேறு மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பாடத்திட்டத்தை அப்போதே பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டது. மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம் இன்று வரையில் அமலுக்கு வராமலேயே உள்ளது. இதனால், மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சிறப்பாசிரியர்கள் கூறுகையில், ‘‘புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதிரியாக பாட இணைசெயல்பாடுகள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பின்தங்கியே உள்ளது. இதனை முறைப்படுத்தும் பொருட்டு 2017ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம்.’’ என்றனர்.

4 comments:

 1. Pg Trb economics WHATSAPP Group 9600640918

  ReplyDelete
 2. பகுதி நேர சிறப்பாசிரியர் வேலையை பணிநிரந்தரம் செய்ங்க அப்புறம் பாடத்திட்டம் பற்றி பேசுங்கள்
  ஆளே இல்லா கடையில டீ ஆத்தன கதையா

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற சிறப்பாசிரியர்கள் பணி நியமணம் பற்றி ஒரு அறிவிப்பும் அல்லது தகவல் ஏதேனும் யாருமே அறிவிக்க மாட்டார்களா?

  ReplyDelete
 4. Who is the black sheep? School department? Trb? People? Onnumea puriyalayae!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி