இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் - வருமான வரி உச்ச வரம்பு உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2019

இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் - வருமான வரி உச்ச வரம்பு உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!


மத்திய பட்ஜெடடுக்கு முன்பு சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 40,014 என்ற அளவில் வர்த்தமாகிறது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 11,980 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்று மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில், பொருளாதாரத்தை உயர்த்தவும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு காணவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மேம்படவும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, தொழில் துறை வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே இந்திய பங்கு சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது.

சூட்கேசுக்கு பதில் சிவப்பு துணிகளால் கட்டி எடுத்து வரப்பட்ட பட்ஜெட்

இந்நிலையில் பட்ஜெட் உரை சூட்கேசில் இல்லாமல் நான்கு சிவப்பு துணிகளால் கட்டி எடுத்து வரப்பட்டது. இது குறித்து  பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறுகையில், இப்படி உரையை கொண்டு செல்வது நமது பாரம்பிரியம் என்றும் மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதை இது குறிக்கிறது என்றும் கூறினார். மேலும் பட்ஜெட் அல்ல லெட்ஜர் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி