காலிப் பணியிடங்களை நிரப்பாததால் அரசுப் பள்ளி அலுவல்களை மாணவர்களே செய்யும் அவலம் - kalviseithi

Jul 5, 2019

காலிப் பணியிடங்களை நிரப்பாததால் அரசுப் பள்ளி அலுவல்களை மாணவர்களே செய்யும் அவலம்


தமிழக அரசுப் பள்ளிகளில் அலுவல கப் பணியாளர், இளநிலை உதவி யாளர் உள்ளிட்டப் பணியிடங்களில் முன்பு 35 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வந்த நிலையில், தொடர் ஓய்வு காரணமாக தற்போது 29 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.

ஓய்வுபெற்றவர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஆண்டுக்கணக்கில் காலிப் பணி யிடங்களாகவே தொடர்கின்றன. துப்புரவுப் பணியாளர்களைப் பொறுத்தவரை அந்தப் பணிகள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தா லும், அவை நிரப்பப்படாமல் உள்ளன.இதனால் அலுவலகப் பணியா ளர் மேற்கொள்ளவேண்டிய சம்பள பில் தயார் செய்வது, பள்ளி ஆய்வகத்துக்கு தேவையான உப கரணங்கள் வாங்குவது, எழுது பொருள் வாங்குவது உள்ளிட்ட பல பணிகளை பள்ளியின் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில பள்ளிகளில் பள்ளி தொடர்பான ஆவணங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள், வகுப்பறைக்கு வருகைப் பதிவேடு மற்றும் மணி அடிப்பது உள்ளிட்ட பணிகளை மாணவர்களே செய்யும் நிலை உருவாகியிருக்கிறது. சில பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் கள் இல்லாததால், பள்ளியை சுத்தம் செய்தல், தண்ணீர் பிடித்து வைத்தல் உள்ளிட்டப் பணிகளையும் மாணவர்களே செய்யும் நிலை உருவாகியுள்ளது.இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அலுவலகப் பணி யாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல், பணியிடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்.

அவர்களின் பணிச்சுமை ஆசிரியர் களைத்தான் சென்றடைகிறது. உதவிக்கு மாணவர்களையும் அழைத்துக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளி கள் மீது ஏற்கெனவே அதிருப்தி நிலவும் சூழலில் இது கவனிக்க வேண்டிய ஒரு மோசமான போக்கு'' என்று தெரிவித்தார்.தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கப் பொருளாளர் வினோத் கூறும்போது, ‘‘அரசின் 56-வது அரசாணைப்படி பள்ளி களில் பணியிடங்களை சரி செய்வ தற்காக ஆதிசேஷையா குழு ஏற் படுத்தப்பட்டது. அந்தக் குழுவி னர் பெரும்பாலான பணியிடங் களை தேவையில்லை என அரசுக்கு பரிந்துரைத்து பல பணியிடங்களை இல்லாமலேயே செய்துவிட்டனர்.

இந்த ஆண்டுகூட 2,800 பணியிடங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகி றோம்.அதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தை காலிப் பணியிடமாக கருத முடி யாத நிலை உருவாகிவிட்டது. சில இடங்களில் பிரச்சினை எழுந்த போது, அவுட்சோர்ஸிங் முறையில் அப்பணியிடத்தை நிரப்ப அரசு 2007-ம் ஆண்டு உத்தரவு பிறப் பித்தபோதிலும், இதுநாள் வரை எவரும் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை யிடம் முறையிட்டிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

பள்ளிக்கல்வித் துறை நிர்வாக வியல் இணை இயக்குநர் நாகராஜ முருகன் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பவிருப்பதாகவும், அனைத்துப் பிரிவு இயக்குநர்களும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்றிருப்பதால், கூட்டத் தொடர் முடிவுற்றதும் காலிப் பணி யிடம் குறித்த விவரமும், தற்போ துள்ள பணியாளர் விவரமும் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி