‘நீட்’ தேர்வில் விலக்கு பெற முடியாது தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

‘நீட்’ தேர்வில் விலக்கு பெற முடியாது தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்


நீட்’ தேர்வில் விலக்கு பெற முடியாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக கூறினார். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில்அக்கட்சி உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வறுமையால் வாடும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது சமூக நீதிக்கு எதிரானது போலவும், இதில் பா.ஜ.க.வுக் கும், பிரதமர் மோடிக் கும் அக்கறை இல்லாதது போலவும் ஒருதோற்றத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்கள் வருவதை தடுப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார். தமிழக வளர்ச்சிக்கு எதிரானவர். மொழி, இனம், மதத்தை வைத்து பிரச்சினை. இன்று இடஒதுக் கீட்டை வைத்து பிரச்சினை.

இதையே செய்துக்கொண்டிருந்தால், தமிழகம் என்றைக்கு வளர்ச்சி பாதைக்கு செல்வது?. தி.மு.க., காங்கிரஸ், ம.தி. மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் அடங்கிய கூட்டணி தமிழக வளர்ச்சிக்கு எதிரான கூட்டணி. தமிழகம் அமைதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் கூட்டணி. இன்றைக்கு மாணவர்கள் ‘நீட்’ தேர்வை முழுமையாக எடுத்துக் கொள்ளாததற்கு தமிழக அரசியல்வாதிகள் தான் காரணம். ‘நீட்’டை விலக்கி விடுகிறோம் என்று சொல்லி மாணவர்களை படிக்க விடாமல் செய்தது எதிர்க்கட்சிகள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இதில் நீதிமன்றமும் தனது கவலையை பதிவு செய்துள்ளது. எனவே தயவு செய்து ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று சொல்ல வேண்டாம். அது முடியாது. மாணவர்களை படிக்க விடுங்கள். உங்கள் அரசியலை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக பேசுகிற அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. 3 lakhs money pay panni coaching center poravanum govt school la padithuvittu neet poravanum onnu?

    ReplyDelete
  2. இவர் படிக்கும்போது நீட் தேர்வு இருந்திருந்தால் அதனுடைய வேதனை புரிந்துதிருக்கலாம்

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ,தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதே இந்த பரட்டைக்கு வேலையாகி விட்டது .இதே போல் வேறு மாநிலத்தில் அவர்களுக்கு எதிராக பேசியிருந்தால் நாக்கை அறுத்து இருப்பார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி