மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  பணி நியமனத்தில் முறைகேடு புகார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  பணி நியமனத்தில் முறைகேடு புகார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர் கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த லியோனல் அந்தோணிராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை பணிபுரிந்தபோது, கடந்த 2017 மே மாதம் முதல் 2018 ஜூன் மாதம் வரை பல்வேறு பணி நியமனங்கள் நடந்துள்ளன. பலருக்கு சட்டவிரோதமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமனங்கள், பதவி உயர்வு தொடர்பாக உயர்நிலைக்குழு அமைத்து விசாரிக்க சிண்டிகேட் டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. செல்லத்துரை பொறுப்பில் இருந்தபோது அறிவிப்பு வெளி யிடாமல் பணி நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

படித்த, திறமையான இளைஞர் கள் பலர் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து வேலைக்காக பலஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையில், உரிய தகுதியில்லாத நபர்கள் பல்கலை.யில் பல்வேறு பணிகளில் முறைகேடாக நியம னம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2017 மே முதல் 2018 ஜூன் வரை பல்கலைக் கழக விதிகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக நடந்துள்ள நியமனங்கள், பதவி உயர்வை ரத்து செய்தும், இந்த முறைகேடு தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர் நிலைக் குழு அமைத்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறி ஞர் அஜ்மல்கான், வாஞ்சிநாதன் ஆகியோர் வாதிட்டனர். பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பணி நியமனம், பதவி உயர்வு முறைகேடு தொடர் பான மனுதாரரின் மனுவை உயர் கல்வித்துறைசெயலர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி