அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் 81 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் 81 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல்


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் உயர்கல் வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித் தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: அரசு பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதுபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 100 பட்டயப்படிப்பு மாணவர்களின் திறனை உலகளா விய அளவில் மேம்படுத்தும் வகையில், அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.

இத்திட்டம் ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் ஆண்டு தொடங்கப்படும். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு,நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தால் வரையறை செய்யப் பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதி கள், ஆய்வகங்கள், நூலகம், பயிற்சிப் பட்டறை ஏற்படுத்து வதுடன் நிர்வாகம் மற்றும்வகுப்பறைக் கட்டிடங்கள் ரூ.37 கோடியில் கட்டப்படும். பாரம்பரியமிக்க சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியைப் புதுப்பித்தல் மற்றும் புதிய மகளிர்விடுதி கட்டும் பணிகள் ரூ.9 கோடியே 90 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிறுவப்படும். கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள பொறியியல் பட்டதாரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறனை மேம்படுத் தவும், வேலைவாய்ப்பை உருவாக் கவும் மண்டலத்துக்கு ரூ.20 லட்சம் வீதம் ரூ.1 கோடியில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

3 comments:

 1. ipadiyea puthu paada pirivunu solriyea thavira posting a kaanom..padichavan unga aatchila nadutheruvil..unnailam ethukuthan Jayalalitha higher educationminister a potangalo.. next election la NOTA unnai seyikum..

  ReplyDelete
 2. Trb arts college professor exam eppam varum anybody pls inform

  ReplyDelete
 3. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யும் பொழுது
  நேர்காணலில் வழங்கப்படும் மதிப்பெண் முறையில் அதிரடி மாற்றங்களை UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது

  இதற்கு முன் இருந்த 34 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை 100 என்ற அளவிற்கு உயர்த்தி அட்டவணை வெளியிட்டு உள்ளது

  அதன்படி

  1)
  Academic Score

  Maximum 84 marks


  a)
  UG Marks

  Above 80 % =
  21 marks

  60 to 80 % =
  19 marks

  55 to 60 % =
  16 marks


  b)
  PG Marks


  Above 80 % =
  33 marks

  60 to 80 % =
  30 marks

  55 to 60 % =
  25 marks

  c)
  M.Phil. Marks

  Above 60 % =
  7 marks

  55 to 60 % =
  5 marks

  Ph.D. = 20 marks

  Ph.D. முடித்து இருந்தால்
  M.Phil. க்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது

  d)
  NET or SET with JRF = 10 marks

  Or

  NET or SET = 8 marks


  2)
  Papers in journals
  6 marks

  2 marks per journal
  Maximum 3 journals


  3)
  Teaching Experience

  10 marks

  2 marks per year
  Maximum 5 years  Total

  100 marks


  இனிவரும் காலங்களில்
  உதவி பேராசிரியர் பதவி நியமனங்கள் அனைத்தும் மேற்கண்ட மதிபெண்கள் அடிப்படையில் தான் நடைபெறும்


  நன்றி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி