பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை..... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2019

பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டியவை.....


தலைமை ஆசிரியர்கள்
மற்றும்
ஆசிரியர்களுக்கு ...

பார்வையின் போது பின்பற்றப்பட வேண்டியவை.....

💁‍♂ அனைத்து ஆசிரியர்களும் காலை வழிபாட்டிற்கு வருகை புரிதல் வேண்டும்.

அரசாணை 264 ன்படி காலை வழிபாட்டு செயல்பாட்டிற்கான பதிவேடுகள் முறையாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
உறுதிமொழி
கொடிப்பாடல்
ஆத்திசூடி (1,2 வகுப்புகளுக்கு)
திருக்குறள்-விளக்கத்துடன் (3,4,5 வகுப்புகளுக்கு)
பழமொழி
பொதுஅறிவு
செய்திகள் (தமிழ் / ஆங்கிலம்)
பிறந்த நாள் வாழ்த்துகள்
ஆசிரியர் நன்னெறி கருத்துக்கள்
தேசியகீதம்
முதலான அனைத்து செயல்பாடுகளும் காலை வழிபாட்டு நிகழ்வுகளில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. சுயவருகைப் பதிவேடு
    மாணவர்கள் தாங்களாகவே குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.

💁‍♂ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும்  தானாக வருகையை பதிவு செய்திட பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

💁‍♂ வகுப்பறையில் பாட அட்டவணை (கால அட்டவணை ) இருத்தல் வேண்டும்.
அதன்படியே கற்பித்தல் நிகழ்வு நடைபெறுதல் வேண்டும்.

💁‍♂ காலநிலை அட்டவணையை மாணவர்கள் குறித்திட  வேண்டும்‌.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் குறித்தல் நன்று.
அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

மாத இறுதியில் காலநிலை சார்ந்த தொகுத்தல் இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂ ஆரோக்கிய சக்கரம் வகுப்பறையில் இருத்தல் வேண்டும்.

பவுடர்,கண்ணாடி,சீப்பு,சோப்பு முதலான பொருள்கள் ஒரு டிரேவில் மாணவர்கள் பயன்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

💁‍♂ஆரோக்கிய சக்கர பொருட்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனியே இருத்தல் வேண்டும்.

💁‍♂ கம்பி பந்தலில் மாணவர்களின் புதிய படைப்புகள் ( ஒரு மாதத்திற்குள்ளானவை - 30 நாட்கள் - ) மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂படைப்புகளில் ஆசிரியர் தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிடுதல் வேண்டும்.

💁‍♂பழைய படைப்புகள்  ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கோப்புகளில் பராமரிக்கப்பட வேண்டும்.

💁‍♂. தாழ்தள கரும்பலகையினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திட வேண்டும்.

💁‍♂மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாழ்தள கரும்பலகை பிரித்திருக்க வேண்டும்.

💁‍♂மேலும் அதில்
மாணவர் பெயர்,வகுப்பு,பாடம்,தேதி மற்றும் மாணவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் குறிப்பிடப்பட வேண்டும்.

💁‍♂அத்தோடு மாணவர்கள் முன்னர் எழுதியதை அழித்து விடாமல் பாதுகாத்தல் நன்று.

💁‍♂. மாணவர்களுக்கு இரண்டு (2) கோடு மற்றும் நான்கு (4)கோடு நோட்டுகளில் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை அல்லது வாக்கியங்களை தனது கைப்பட எழுதி பயிற்சிக்காக கொடுத்திட வேண்டும்.

💁‍♂மேலும் அதனை சரியான முறையில் அந்த வளைவு கோடுகள்,ஏற்ற இறக்கங்கள் முதலான இதர பிழைகள் இருந்தால்
அதை சுட்டிக்காட்டி திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.

💁‍♂. மாணவர்களுக்கு தினமும்
தமிழில் இரண்டு வார்த்தைகளும் ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகளும்
Dictation ஆக கொடுக்க வேண்டும்.
அதனை தினமும் வகுப்பு ஆசிரியர் திருத்தி தனது கையொப்பத்தை தேதியுடன் குறிப்பிட வேண்டும்.

💁‍♂ 1,2 ,3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் அணுகுமுறையிலேயே கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.

💁‍♂மூன்று வகுப்புகளும் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 30 நிமிடங்களும்

💁‍♂இரண்டு வகுப்புகள் இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் 45 நிமிடங்களும்

💁‍♂ஒரே வகுப்பு இருந்தால் 90 நிமிடங்களும் கற்பித்தல் நிகழ்வு நடத்திட வேண்டும்.

💁‍♂ஒரு வகுப்பிற்கு கற்பிக்கும் போது மற்ற இரண்டு (2) வகுப்புகளுக்கு இதர கற்றல் செயல்பாடுகளை அல்லது பணிகளை கொடுத்திட வேண்டும்.

💁‍♂குழு அட்டை பயன்படுத்துதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது குழு செயல்பாடுகளுக்கும்
மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விட வேண்டும்.

💁‍♂. 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM)முறையில் கற்பித்தல் நிகழ்வு நடைபெற வேண்டும்.

💁‍♂கற்றல் பெட்டிகள் புதிய வார்த்தைகள், கருத்து வரைபடம், தொகுத்தல், மதிப்பீடு, தொடர் பணி ஆகிய ஐந்தும் (5) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தனித்தனியே இருத்தல் வேண்டும்.

💁‍♂புதிய வார்த்தையில் பொருள் புரியாத அல்லது தெரியாத வார்த்தைகள் மட்டுமே இடம் பெறுதல் வேண்டும்.

💁‍♂கருத்து வரைபடம் வரையும்போது கோடிட்ட இடத்தை நிரப்புவது போன்று அமைதல் வேண்டும்.

💁‍♂  ஆசிரியர் பாடத்திட்டம் எழுதுதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது கற்றல் துணைக்கருவிகள் பயன்படுத்துதல் வேண்டும்.
ABL அட்டைகளை பயன்படுத்தலாம்.

💁‍♂. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் ஒரு கட்டுரை கண்டிப்பாக எழுதுதல் வேண்டும்.

💁‍♂கட்டுரைகள் பல உட் தலைப்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.

💁‍♂கட்டுரையில் வரும் தவறுகளுக்கு அதன் நேர் பகுதியில் மட்டுமே மாணவர்கள் எழுதி இருத்தல் வேண்டும்.

💁‍♂ஆசிரியர் கட்டுரையை திருத்தி கையொப்பம் இடுதல் வேண்டும்.

💁‍♂. இரண்டு  முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் பதிவேடு Update செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

💁‍♂மாணவர்களின் தரநிலை உண்மை தன்மையுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

💁‍♂ 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு  மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன் , எழுதுதல் திறன் மற்றும் எளிய கணித செயல்பாடுகள் முதலானவற்றில் தரநிலை A மற்றும் B  நிலையிலேயே மாணவர்கள் இருத்தல் வேண்டும்.

💁‍♂6 ,7, 8 ஆம் வகுப்புகளுக்கு  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பு திறன் என்பது A தரநிலையிலேயே இருத்தல் வேண்டும்.

💁‍♂அதற்கான முயற்சியை ஆசிரியர்கள் விரைவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

💁‍♂ வளரறி மதிப்பீடு( அ ) Fa(a)
மற்றும்
வளரறி மதிப்பீடு (ஆ) Fa(b)
முதலான தேர்வுகள் நடைபெற்று இருக்கவேண்டும்‌.

💁‍♂அந்த நோட்டினை திருத்தம் செய்து ஆசிரியர்கள் தேதியுடன் கையொப்பம் இட வேண்டும்.

💁‍♂மேலும்
Fa(a) , Fa(b) தேர்வுக்கான வினாத்தாள்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

💁‍♂ஆசிரியர்கள் பராமரிக்கும் CCE பதிவேட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வேண்டும்.
மாணவர்கள் நோட்டில் உள்ள மதிப்பெண்களுக்கும் CCE பதிவேடிற்கும் முரண்பாடுகள் இருத்தல் கூடாது.

💁‍♂. மெல்லக் கற்போர் பதிவேடு பராமரித்தல் வேண்டும்.

💁‍♂C மற்றும் D தரநிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னென்ன செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்பதை பதிவேட்டில் பதிவு செய்யவும்.

💁‍♂. ஆசிரியர்கள் பாட வேலை பதிவேடு ( Work Done Register ) Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂கற்பித்தல் நிகழ்வானது ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்புகளுக்கு புதிய கற்றல் / கற்பித்தல் அணுகுமுறையிலேயே இருத்தல் வேண்டும்.

💁‍♂4 மற்றும் 5-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி (SALM) முறையிலேயே கற்பித்தல் இருத்தல் வேண்டும்.

💁‍♂6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு படைப்பாற்றல் கல்வி (ALM) முறையில் கற்பித்தல் நிகழ்வு அமைதல் வேண்டும்.

💁‍♂. கற்பித்தலின் போது அனைத்து ஆசிரியர்களும் QR Code னை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

💁‍♂. மாணவர்களின் நோட்டுகளில் புதிய வார்த்தைகள் கண்டறிதல் , அடிக்கோடிடுதல் கருத்து வரைபடம் அல்லது மன வரைபடம் தொகுத்தல் முதலான செயல்பாடுகளை செய்துள்ளனரா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. வகுப்பறையில் அகராதிகள் (3 Volume Dictionary) பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂  TV DVD மாணவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. கணித உபகரணங்கள் பயன்பாடு பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. எளிய அறிவியல் சோதனைகள் பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. புத்தக பூங்கொத்து பதிவேடு Update செய்தல் வேண்டும்.

💁‍♂. Language Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. Science Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. Sports Kit பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. கணினி மையங்கள்  உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை பயிற்சிகள் கொடுத்தல் வேண்டும்.

அதற்கான பதிவேட்டினை Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂பழுதடைந்த கணினிகள் இருந்தால் அதனை சரி செய்து வைக்கவும்.

💁‍♂ மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு முறையாக சுத்தமாக வழங்கப்படுகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் முறையாக பயன்படுத்தி அதற்கான இரசீதுகளை கோப்புகளில் பராமரிக்கவும்.

💁‍♂மான்ய தொகையிலிருந்து பள்ளிக்கு செய்தித்தாள் வாங்கிக்கொள்ளலாம்.

💁‍♂ தீர்மானப் பதிவேடு ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு முன்பும் முறையாக Update செய்திருத்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி மேலாண்மை குழு (SMC)
கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுதல் வேண்டும்.

💁‍♂பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் வளர்ச்சி மற்றும் இதர செயல்பாடுகள் அனைத்தும் பதிவேட்டில்  இருத்தல் வேண்டும்.

💁‍♂. குடிதண்ணீர் வசதி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂. கழிப்பிட வசதி சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா ? என்பதை கண்காணித்தல் வேண்டும்.

💁‍♂வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முதலானவை தூய்மையாக இருத்தல் வேண்டும்.

💁‍♂. ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்திய  Periodical  Assessment test க்கான தரநிலை படிவம் பள்ளியில் இருத்தல் வேண்டும்.

💁‍♂. பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மையம் ( NRSTC ) பள்ளியில் செயல்பட்டு வந்தால் மையத்தை , மாணவர்கள் கற்றல் நிகழ்வினை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.

இணைப்பு மையம் தனி வகுப்பறையில் செயல்படுதல் வேண்டும்.

💁‍♂. போக்குவரத்து வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முறையாக மாணவர்கள் பயன்படுத்துவதை தலைமையாசிரியர் கண்காணித்தல் வேண்டும்.

5 comments:

  1. ஒரு வகுப்பில் 38 மாணவர்கள் இருக்கின்றனர்.அந்த ஆசிரியர் ஒரு நாளில் 2lines =38,4lines =38,Homework=38,Dictation=38,classwork=38,Dictionary note=38,என 38*6=228 குறிப்பேடுகளை திருத்தம் செய்ய வேண்டும்.இது அல்லாமல் புத்தகப்பூங்கொத்து,slm kit note,science experiments note,Language kit note,concept map note...இத்துடன் slow bloomers action plan note...இது திறம்பட சாத்தியமாக வழி கூறுங்கள்.please....

    ReplyDelete
  2. S mam there is no enough time... Note correction pannave time poita class eduka time patharathu illa

    ReplyDelete
  3. Pathivedugalai sari parthal manavargalin kalvi tharam kuraivaga than iruku,...aasiriyargalin gavanam pathivetil than irukum

    ReplyDelete
  4. மூத்த நல்ல ஆசிரியர்களை திட்ட இயக்குநர் , பாடநூல் கழகம் போன்ற உயர் பதவிகளில் அமர்த்தினால் மட்டுமே கல்விக்கு தேவையான திட்டங்கள் வரும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி