பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2019

பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு  பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வான ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியாக பி.இ. படிப்பை முடித்திருந்ததால்தேர்வு நடைமுறையிலிருந்து அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து லக்ஷ்மி பிரபா தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அவர் அளித்த உத்தரவு வருமாறு: வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள தமிழகத்தில்,  மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வு அறிவிப்பிலேயே கூடுதல் கல்வித்தகுதி உடையவர் பணியிலும் நியமிக்கப்பட்டாலும் நீக்கப்படுவார் என தெரிவித்துள்ளதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இந்த வழக்கில் மெட்டோ ரயில் நிறுவனம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதைவிட மனுதாரர் கூடுதல் தகுதி பெற்றுள்ளார். எனவே, இந்த பணி நியமனத்தை பொறுத்தவரை கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம்  கோர உரிமையில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. டிப்ளமோ படித்துவிட்டு இன்ஜினியரிங் படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் விஏஓ தேர்விற்கான பத்தாம் வகுப்பு அடிப்படைத் தகுதியை பெறாதவர்கள் எவ்வளவு மேற்படிப்பு படித்து இருந்தாலும் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. பத்தாம் வகுப்பு படிக்காமல் மேற்படிப்பு படிப்பது சாத்தியமில்லை என்னும்போது அவர்கள் எல்லாரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி