மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு


மாணவர் சேர்க்கை விபரங்கள், 'எமிஸ்' இணையதளத்தில் முரண்பட்டிருந்தால், உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், பள்ளிகளில் படிக்கும், 1.50 கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர் விபரங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன; குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சில பள்ளிகளில் ஆய்வு செய்ததில், 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர் விபரங்கள், 'அப்டேட்' செய்யப்படாமல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. சேர்க்கை விபரங்கள் வேறுபட்டுள்ளன.

இதற்கு காரணமான, அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 'எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர் சேர்க்கை விபரத்தை, முதன்மைக் கல்வி அலுவலர்கள், வகுப்பு வாரியாக, வரும், 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி