அரசு பள்ளிக்கு 'விசிட்' விரைவில் சிறப்பு குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2019

அரசு பள்ளிக்கு 'விசிட்' விரைவில் சிறப்பு குழு


அரசுப் பள்ளிகளில் சேருவோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டும், மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது.

சில ஆசிரியர்களின் நடவடிக்கை இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் ஆசிரியர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காணவே, நடப்பாண்டில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்களை கண்காணிக்கவும், அவர்களின் கற்பித்தல் திறனை சோதிக்கவும் வட்டார அளவில் சிறப்பு குழு விரைவில் அமைக்கப்பட உள்ளன. இக்குழுவினர், பள்ளிகள்தோறும் 'விசிட்' அடித்து, பள்ளி பதிவேடுகள், ஆசிரியர், மாணவர் வருகை, கற்பித்தல் முறைகள் அனைத்தும் ஆய்வு செய்ய உள்ளன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா கூறுகையில், ''தற்போது தனிப்பட்ட முறையில் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறேன்.வட்டார கல்வி அலுவலர்கள் கொண்ட குழு விரைவில் உருவாக்கப்படும்.

இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

1 comment:

  1. நல்ல விஷயம் தேவையற்ற வதந்திகளுக்கு ஒரு முற்று புள்ளி ஏற்படும் உண்மை நிலவரங்களை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி