உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம் - kalviseithi

Jul 29, 2019

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம்


தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள 45 ஆசிரியர்களுக்கு, கடலுாரில் நடந்த திடீர் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே வேலுார் லோக்சபா தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு,இவ்விரு பிரிவு ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்ததில், பாதிக்கப்பட்ட ஒரு இடைநிலை ஆசிரியர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளார்.அதைதொடர்ந்து ஆசிரியர்களின் கவுன்சிலிங் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலுாரில் கடந்த 24ம் தேதி நடந்த திடீர் கலந்தாய்வில் முதுநகரில் உள்ள 4 அரசு உதவி பெறும் பள்ளி, புதுநகரில் 3 அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் கூடுதலாக இருந்த 45 ஆசிரியர்கள், கவுன்சிலிங் மூலம், அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை 29ம் தேதி அரசு பள்ளிகளில் பொறுப்பேற்கின்றனர்.

3 comments:

 1. வணக்கம்
  குறைந்த கட்டணத்தில்
  E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

  1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
  2.IT RETURN - Rs 200/Person
  3. Form 10E
  4.Income Tax Notice - Ratification

  **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

  தொடர்புக்கு
  9677103843
  6383466805

  ReplyDelete
 2. Paisa koodudhu joint pandra teachers eduku government school a transfer pannanum exam eludha sollunga

  ReplyDelete
 3. Waste government paddechavanga saganum paisa ullavanga nallaa irunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி