மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு சென்னை சி.ஐ.டி. நகரில் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்வியகம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றநோக்கில் அதற்கென்று இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1, 2, 2ஏ போன்ற இதர பதவிகளுக்கும் இலவச பயிற்சியை வழங்கி வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 381 மாணவ-மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் படித்து தேர்வில் வெற்றி பெற்று மாநில, தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மனிதநேய அறக்கட்டளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு முன்னதாகவே ஆரம்பிக்க இருக்கிறது.இதன் மூலம் மாணவர்கள் தேர்வு நோக்கில் பாடங்களை தெரிந்து கொள்ளும் திறன், நேர மேலாண்மை மற்றும் மாணவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த பயிற்சியில் பயின்று வெற்றியடைய விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகள், மாதிரி தேர்வுகள், முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.இந்த தேர்வை எழுத கட்டணமில்லா பயிற்சி பெற விரும்பும் மாணவ-மாணவிகள் அனைவரும்www.mntfreeias.comஎன்ற இணையதளத்தில் TNPSC Gr.I & Gr.II Ex-am 2020 என்ற இணைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி