100 நாள் வேலை திட்டத்தில் பள்ளியை சுத்தப்படுத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2019

100 நாள் வேலை திட்டத்தில் பள்ளியை சுத்தப்படுத்த உத்தரவு


டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பள்ளி வளாகத்தை, 100 நாள் வேலை திட்டத்தில், சுத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அவர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மழைக் காலங்களில், பள்ளி வளாகங்களில் உள்ள புதர்கள் மற்றும் குப்பையால், கொசு உற்பத்தி அதிகரித்து, 'டெங்கு' உள்ளிட்ட தொற்று நோய்கள் உருவாகும்.

இதை கட்டுப்படுத்த,ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் இணைந்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை பயன்படுத்தி, பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்.மாணவ - மாணவியரிடம், டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகம், வீடுகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி