டிப்ளமா நர்சிங் படிப்பு26 முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2019

டிப்ளமா நர்சிங் படிப்பு26 முதல் விண்ணப்பம்


டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமாநர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் துவங்குகிறது.

விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்டம்பர், 4க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தர வரிசை பட்டியல், செப்., 9ல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி