10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு  மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு - kalviseithi

Aug 20, 2019

10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு  மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு


கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் 40 ஆயிரத்து 771 பேர் தேர்வு எழுதினர். அதில் 1898 விடைத்தாள்களில் மறுகூட்டல் செய்யப்பட்டன. அவற்றில், மதிப்பெண் மறுகூட் டலில் மாற்றஉள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் கொண்ட பட்டியல் http://scan.tndge.in/ என்ற இணையதளத்தில் இன்று (ஆக.20) பிற்பகளில் வெளியிடப்படும்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, இப்பட்டியலில் இடம்பெறாத பதி வெண்களுக்கான விடைத்தாள் களில், மதிப்பெண்களில் எவ் வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண் கள் பதிந்த தற்காலிக மதிப் பெண் சான்றிதழை இன்று பிற்பகல் முதல் www.dge.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு பதி வெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி