தமிழகத்தில் 171 அரசு பள்ளிகளில் தலா 20 லட்சம்ரூபாய் மதிப்பில் நவீன ஆய்வகங்கள் (அட்டல் டிங்கர் லேப்) அமைக்கப்படும்" என கல்வித்துறை இணை இயக்குநர் கோபிதாஸ் தெரிவித்தார்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக்நிதியுதவி திட்டம் மூலம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் 'அட்டல் டிங்கரிங் லேப்' ஏற்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக மதுரையில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) கூடுதல் இயக்குனர் குப்புசாமி தலைமை 16 மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.இணை இயக்குனர் கோபிதாஸ்முன்னிலை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உட்பட மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 16 மாவட்டங்களில் ஆய்வகம் அமைக்க தேர்வாகியுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கோபிதாஸ் கூறியதாவது: பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரித்து, ஆராய்ச்சி திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதிஆயோக் நிதியுதவி திட்டத்தில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. ரோபோட்டிக் மற்றும் செயற்கை அறிவாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நவீன தரத்தில் உருவாக்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக தமிழகத்தில் 171 அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான முன்ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நிதிஒதுக்கீடு பெறப்பட்ட பின் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி