பி.எட் கலந்தாய்வு இன்று தொடக்கம்: ஆகஸ்ட் 19ல் வகுப்பு தொடக்கம் - kalviseithi

Aug 7, 2019

பி.எட் கலந்தாய்வு இன்று தொடக்கம்: ஆகஸ்ட் 19ல் வகுப்பு தொடக்கம்


பி.எட் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் கடந்த மாதம் தொடங்கியது.

7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கு 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. அதன்படி, பி.எட் மாணவர் சேர்க்கைக்கு 3,800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் அடிப்படையிலான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்களின் வாரிசுகள், பி.இ., பி.டெக் படித்துவிட்டு பி.எட் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

நாளை தமிழ், ஹோம் சயின்ஸ், பொருளாதாரம், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 9ம் தேதி தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதை தொடர்ந்து 10ம் தேதி இயற்பியல், வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளுக்கும், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 11, 13ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும். 13ம் தேதி பிற்பகலில் காலியாக உள்ள எஸ்.டி பிரிவினர்களுக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 19ம் தேதி சீட் தேர்வு செய்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

1 comment:

  1. KSJ academy, Namakkal offers ONLINE TEST for PG TRB ENGLISH. Totally 16 Tests comprising 2200 questions on par with TRB standard.

    The interested Aspirants may contact this number 9865315131 for further details.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி