மாணவர்கள் மரம் நட்டால் மாதத்துக்கு 2 மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2019

மாணவர்கள் மரம் நட்டால் மாதத்துக்கு 2 மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்கள் 3 மரங்கள் நட்டால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 10வது மாநில மாநாடு மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்த கடமை சாரண சாரணியர்  இயக்கத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் அதிகம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரங்களை நடுவதற்கு கடமையில் அரசும் உள்ளது. அதன் அடிப்படையில் 3 மரங்கள் நட்டால் மாணவர்களுக்கு மாதத்துக்கு 2 மதிப்பெண் வழங்கலாம் என்ற திட்டம் அரசுக்கு உள்ளது.

இந்தியாவிலேயே கல்விக்கென முதன் முதலில் தொலைக் காட்சி தொடங்கியது தமிழகம் தான். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மாணவியருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 40 சதவீத மாணவர்கள் தான் உயர்கல்விக்கு செல்கின்றனர். மீதமுள்ளவர்கள் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி