30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2019

30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!


1) தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி நோட்டு தினசரிஎழுதி தேதியுடன் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2) சொல்வதை எழுதுதல் பயிற்சி அந்தெந்த வகுப்புக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதி திருத்தம் செய்யப்பட வேண்டும்.

3) பருவத்தேர்வு மாதங்களில் மொழி படத்திற்கு 1 கட்டுரை யும் மற்ற மாதங்களில் 2    கட்டுரைகளும் எழுத்தப்பட்டு திருத்தம் செய்ய பட வேண்டும்.

4) அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும்.

5)News reader role model லில் அனைத்து மாணவர்களும் பங்கு பெற செய்ய வேண்டும்.

6) 1-8 வகுப்புக்கு ஆசிரியர் பாடக்குறிப்பேடு  எழுதப்பட வேண்டும்.

7) எல்லா வகுப்புக்களுக்கும் பாட நோட்டு எழுதப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும்.

8) FA(a),FA(b) மற்றும் CCE பதிவேடுகள்பராமரிக்கபட வேண்டும்.

9) ஒவ்வொரு வகுப்பறையிலும் கால அட்டவணை பின்பற்றி பதிவேடு பேணப்பட வேண்டும்.

10) தரைமட்ட கரும்பலகையில் வண்ண சுண்ணக்கட்டி கொண்டு எழுத பயிற்சி கொடுக்க பட வேண்டும்.

11) எழுத்துக்கள் தெரியாமல் எந்த மாணவர்களும் இருக்க கூடாது.

12) அனைத்து மாணவர்களுக்கும் வாய்பாடு தெரிந்து இருக்க வேண்டும்.

13) science kit & maths kit பயன்படுத்தி பதிவேடு பராமரிக்க வேண்டும்.

14) நூலகம் மற்றும் புத்தகப்பூங்கொத்து படிக்கும் மாணவர்களை  ஊக்கப்படுத்தி பரிசு வழங்கப்பட வேண்டும்.

15) கணித அடிப்படடை செயல்பாடுகள், இடமதிப்பு, மடங்குகள், மன கணக்கு, வாழ்க்கை கணக்குகளுக்கு பயிற்சி அளிக்க பட வேண்டும்.

16) மன்ற செயல்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் செயல்படுத்தி பதிவேடு பேணப்பட வேண்டும்.

17) ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு  பேணப்பட வேண்டும்.

18) பள்ளி மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக இருத்தல் வேண்டும்.

19) அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் வினாக்களுக்கு பதில் அளிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

20) செய்யுள் பகுதியில் மனப்பாட பாடலை இராகத்துடன் பாட பயிற்சி அளிக்க பட வேண்டும்.

1 comment:

  1. தயவு செய்து ஒவ்வொரு வாரமும் தினப் பாட வேலையில் இந்த work தான் உங்களுக்கு என்று ஒரு அட்டவனை கொடுத்து விடுங்கள் so யாருக்கும் எந்த risk க்கும் இருக்காது அந்த ஒரு குறிப்பிட்ட வாரத்தில் அந்த வேலை நடக்க வில்லை என்றால் அதற்கான பதிலை அந்த குறிப்பிட்ட ஆசிரியரிடம் கேட்கலாம் நான் சொல்வது உயர் அதிகாரிகளுக்கு புரியும் என்று நினைக்கிறேன் ஆனால் இந்த செயலுக்கு முன் வர மாட்டார்கள் ஏன் என்று அவர்களுக்கே தெரியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி