தமிழகத்தில் 45 அரசு கலை, அறிவி யல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வித் துறையின்கீழ் 14 கல்வியியல் கல்லூரிகள் உட் பட மொத்தம் 113 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல் படுகின்றன. இதில் 2.8 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதுதவிர 45 அரசு கலை, அறிவியல் கல் லூரிகளில் புதிதாக 81 பாடங்கள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன் கடந்த ஜூலை 2-ம் தேதி சட் டப்பேரவையில் அறிவித்தார். தொடர்ந்து அதற்கான அர சாணையை வெளியிட்டு நடப்பு கல்வி ஆண்டிலேயே புதிய பாடப் பிரிவுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டஅர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு கல்வி ஆண்டில்45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 69 இளநிலை, 12 முதுநிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கு ஏதுவாக 2019-20-ம் கல்வி ஆண்டில் 167 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2020-21-ல் 145 உதவி பேராசிரியர் பணியிடங்கள். 2021-22-ம் ஆண்டில் 138 உதவி பேராசிரியர் பணியிடங்கள் தோற்று விக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கல்லூரி கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
இதை ஆய்வு செய்து 45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடங்கள் தொடங்க அரசு அனுமதி அளிக்கிறது. முதலாம் ஆண்டில் ஆசிரியர் நியமனம் உட்பட இதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர ரூ.13.65 கோடி நிதி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாடங்கள் தொடங்கப்பட்ட45 கல் லூரிகளிலும் நடப்பு கல்வி ஆண்டிலேயே ஆக.31-க்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி