தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639. கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2019

தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639. கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!


தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.மொத்தமாக அரசுப் பள்ளிகளில் 2,28,990 ஆசிரியர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,360 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து அரசு பள்ளிகளுக்கு தேவையான உடற்பயிற்சி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என சேர்த்து மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றார்.

9 comments:

  1. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???*

    *TRB தேர்வு வாரியத்தின், ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு நடவடிக்கை*

    April 2017 - TET Exam - 200 Fraud candidates
    Scanning agency: Datatec methodex
    தேர்வு ரத்து செய்யப்படவில்லை... வாரியம் சொல்கிற காரணம் OMR safe

    August 2017 - PG TRB
    Scanning agency: Datatec methodex
    OMR விடைத்தாள்களை Rescan செய்ய வாரியம் முன்வரவில்லை

    September 2017 - Polytechnic exam
    Scanning agency: Datatec methodex

    தேர்வு ரத்து.. வாரியம் சொன்ன காரணம்.. இன்னும் police case முடியவில்லை.. எனவே சந்தேகத்தின் பேரில் ரத்து
    Note: இங்கேயும் OMR safe
    Real reason: Justice kirubakaran file செய்த suo motto caseல் இருந்து தப்பிக்கவே.. தேர்வு ரத்து

    October 2017: special teacher exam
    Scanning agency: Datatec methodex

    Rescan செய்து முடிவு வெளியீடு

    ஒரே நபர் இந்த 4 தேர்வையும் நடத்த உதவியிருக்கும் போது.... இரண்டில் fraud candidates கண்டுபிடித்திருக்கும் போது...

    பாலிடெக்னிக் தேர்வு மட்டும் ஏன் ரத்து????

    *எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி*

    ReplyDelete
  2. https://www.youtube.com/channel/UCmRzLtlxhxh-7B7d31VKvJg

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி