காலை முதல் மாலை வரை காமராஜர் வீட்டை சுத்தம் செய்யணும்!'- மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்ததண்டனை - kalviseithi

Aug 14, 2019

காலை முதல் மாலை வரை காமராஜர் வீட்டை சுத்தம் செய்யணும்!'- மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்ததண்டனை


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 8 மாணவர்கள் மீது, போதையில் அத்துமீறி கணிப்பொறி ஆய்வகத்துக்கு வந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனால் அவர்களை 3-ம் ஆண்டு படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனிடையே, தங்களை அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்8 மாணவர்களும் மனுத்தாக்கல் செய்தனர்இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்ததுஅப்போது நீதிபதி, ``மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், கடைசி ஆண்டில் கல்லூரியைவிட்டு வெளியே அனுப்பினால் பல்வேறு பாதிப்பு ஏற்படும். மேலும், தவறு செய்த மாணவர்கள் தவற்றை உணர்ந்து உறுதி அளித்துள்ளனர்.

இதனால் மாணவர்கள்ஆகஸ்ட் 15-ல் விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.மாலை 4 மணிக்கு மேல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளைஏந்தி நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதைக் கண்காணிக்க கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர் ஒருவரை கண்காணிக்க உத்தரவிடலாம். மாணவர்கள் இதை பின்பற்றினால் கல்லூரியில் அனுமதிக்கலாம்.

நீதிமன்றம்

இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"என உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி