வளர்ச்சியின் சாட்சி நமது கல்வித் தொலைக்காட்சி - கவிதை ஆசிரியர் திரு. சீனி தனஞ்செழியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2019

வளர்ச்சியின் சாட்சி நமது கல்வித் தொலைக்காட்சி - கவிதை ஆசிரியர் திரு. சீனி தனஞ்செழியன்


செழிக்கும் நற்கல்வியால் தழைக்கும் நம் தமிழகம்
கல்வியுகப் புரட்சியாய் 
வருகுது கல்வித்தொலைக்காட்சி

வளர்ச்சி ஒன்றை மூச்சாக்கி
பாடங்கள் மாறுது
கல்வி ஒன்றைக் கையிலெடுத்து அறிவிங்கே படங்களாக ஓடுது

தித்திக்கும் திருக்குறளும் திகட்டாத கதைபலவும் குவியலாக கிடக்குது
ஏடு தாண்டி கணினி போதாதென கல்வித் தொலைக்காட்சி கனவுகளைக் கூட்டுது

பொம்மலாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டமென பாரம்பரியம் திரும்புது
சின்னச்சிறு குழந்தைகளும் திரையில் வர தித்தித்துப் போகுது

வெற்றி பெற வழிபலவும் காட்டி
விஞ்ஞானம் மெய்ஞானம் ஊட்டி
கட்டிக்கரும்பாக வருகுது கல்வித் தொலைக்காட்சி
இனி கனவெல்லாம் நிறைவேறும் வேறென்ன வேண்டும் சாட்சி

பலதிட்டம் போட்டே தான் கல்விக் காக்கிறது நம் அரசு
பலபள்ளி இருந்தாலும் அரசுப்பள்ளி உயர்வென்றே கொட்டுது வெற்றி முரசு

பிள்ளைகளே 
களித்திடுங்கள் கற்றிடுங்கள்
அறியாமை அகலட்டும்
இருள் நீங்கி புத்தொளிதான் பாரெங்கும் பரவட்டும்

கதையுண்டு கற்கண்டு சுவையுண்டு களித்திடுங்கள் தினம் கண்டு

ஆசான்கள் பாடத்தோடு பாடல்பாட
சேதி பல கொண்டு வருதே இத்தொலைக்காட்சி
இனிக்க இனிக்க கற்பீர்கள் அதுவே சாட்சி

கோடிமலர் தூவி அனைவரும் வரவேற்போம்
கல்வி ஒன்றே மாற்றம் தரும் முழுதாய் அதைக் கற்போம்

இது நம்ம தொலைக்காட்சி
அதுதான் நம்ம கல்வித்தொலைக்காட்சி
அகிலமெங்கும் பரவட்டும் அதன் ஒப்புயர்வற்ற மாட்சி

சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்,
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி