கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2019

கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல்!


தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை பணிநிரவல் கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதாக, ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2018 ஆக.,1 ல் 10 மாணவருக்கும் குறைவான பள்ளிகளில் இருக்கும் இரு ஆசிரியரில் ஒருவரை மட்டுமே பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று அந்தந்த மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கவுன்சிலிங் நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் அரசு உத்தரவை மீறி 2019 ஆக.,1 நிலவரப்படி 10 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளி ஆசிரியரையும் கவுன்சிலிங்கிற்கு அழைத்துள்ளனர். பணிநிரவல் வழங்காமல் விதியை மீறி கட்டாய இடமாறுதல் வழங்கியதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப்சேவியர் கூறியதாவது:

பணிநிரவல் என்றால் 10 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளியில் உள்ள இரு ஆசிரியரில் ஒருவரின் பணியிடத்தை காலி செய்து விட்டு, அவரை மாற்று பள்ளிக்கு பணிநிரவல் செய்யலாம். ஆனால் தென் மாவட்டங்களில் மட்டும் ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், இரு ஆசிரியரில் ஒருவரை கட்டாய இடமாற்றம் செய்துள்ளனர். அதிலும் அரசு உத்தரவை மீறி 2019 ஆக.,1 நிலவரப்படி ஆசிரியர்களை கணக்கெடுத்தது தான் கண்டனத்திற்குரியது. இடமாறுதல் கவுன்சிலிங்கில் விதியை அரசு பின்பற்றுவதில்லை என நீதிமன்றம் கண்டித்து வரும் நிலையில், மறைமுகமாக பணிநிரவல் என அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதை கண்டிக்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னர், 6 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை எடுத்துள்ளனர், என்றார்.

9 comments:

  1. தொடக்க கல்வி ஆசிரியர்கள்
    இனிமேலாவது மாணவர்களின்
    கற்றல், வாசிப்பு திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுக்க வேண்டியது
    கடமை,உடனே இப்பதிவிர்க்கு கண்டனம் ...செய்வதை விட்டு மனசாட்சி யோடு மாணவர் நலனுக்காக குரல் கொடுப்போம்

    ReplyDelete
  2. Ipo vera Ena panitu irukanganu nenaikareenga. Parents ta kelunga education epdi irukunu

    ReplyDelete
    Replies
    1. ஒரு நடுநிலை பள்ளி மாணவர்கள் 10 பேர் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளி அல்லது உயர் நிலை பள்ளிக்குச் 9std சென்றால் அதில் 8பேருக்கு வாசிக்க தெரியாமல் இருக்கும் போது....

      Delete
  3. Adippadaya epdi strength koranjadhunu parunga sir endha thiranum nanga valakama ila.

    ReplyDelete
  4. Tet appointed teachers also compelled deployment to kg

    ReplyDelete
  5. Strength kurainthal udane aasiriyar thaan kaaranam endru sollatheergal unmaiyai therinthu pathividavum...

    ReplyDelete
  6. வகுப்பவகுப்பிற்கு 30 மாணவர்கள் என்ற விகித்தில் பள்ளிகளை இனைந்து வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் என நியாயம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  7. தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல அண்டை வீட்டார் தான் காரணம். அடுத்தவர் ஏளனமாய் சொல்லுவார்கள் என்ற எண்ணத்தில் வருமானத்தில் பெருந்தொகை செலவிட்டு படிக்க செய்கின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி