ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2019

ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தின் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வரத்து அதிகரித்துள்ளது தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் உள்ள 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்.கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிகணிணிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிகணிணிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி விரைவில் வழங்கப்படும்.6 முதல் 8 ம் வரையிலான 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்கஏற்பாடு செய்யப்படும்.

இந்தாண்டு அரசு பள்ளி களில், 1.78 லட்சம், மாணவ - மாணவியர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்,14 ஆயிரம் ஆசிரியர்கள், கூடுதலாக உள்ளனர்.  மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. Nie uru minister very bad spech

    ReplyDelete
  2. நீங்க பணி கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை பேசாமல் வாய் மற்றும் எல்லாவற்றையும் மூடி இருந்தாலே போதும்

    ReplyDelete
  3. Vera velaye illa pola

    ReplyDelete
  4. அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகமா இருக்கு....மக்களுக்கு பயனில்லாமல் வெட்டியா இருக்குன்னு மக்கள் சொல்லுறாங்க.....என்ன செய்ய......


    தலைவிதி.....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது ஏன் தேவையில்லாமல் TRB தேர்வு நடத்த வேண்டும்.500 ரூபாய் வசூல் செய்வதற்காகவா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி