ஆசிரிய இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!! - kalviseithi

Aug 13, 2019

ஆசிரிய இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!

மாணவர்கள் இல்லை என்று 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்ட செய்தியை பொதுமக்கள் பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றால் தவறில்லை. ஆனால் நாமும் அவ்வாறு கடந்து செல்வது நியாயமா?

இந்த பள்ளிகள் மூடப்படுவதை தடுத்திட நாம் செய்தது என்ன? அப்பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூட இதனை தடுக்க தவறி விட்டதாகவே தெரிகிறது. மூடப்படும் பள்ளிகளின் அருகில் பணிபுரியும் ஆசிரியர்கள் பத்துப்பேர் ஒன்றிணைந்து ஊர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே! ஏன் இதனை செய்ய மறந்தோம். ஊதியத்தை உயர்த்த மட்டுமே போராட்டம்
செய்யும் ஆசிரியர்கள் என்ற கெட்ட பெயரை இதன் மூலம் சரி செய்யலாம். பத்து ஆசிரியர்கள் இதற்காக ஒன்றிணைய முடியாதா? பள்ளிகளை மூடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதையும் வைரல் ஆக்குங்கள். களத்தில் இறங்குவோம் அரசுப்பள்ளிகளைக்
காப்போம்.!!

5 comments:

  1. நல்ல செய்தி

    ReplyDelete
  2. உண்மை தான் மக்களுக்காகத்தான் அரசு எனவே மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்...

    ReplyDelete
  3. எந்த ஆசிரியரும் முன் வரமாட்டார்கள்.. சுயநலம் மிக்கவர்கள்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி