குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த அதிரடிதமிழக அரசு செயல்பாடு சரிதானா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2019

குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த அதிரடிதமிழக அரசு செயல்பாடு சரிதானா?


ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்விக்கு ஒரே வழி அரசுப்பள்ளிகள் தான். சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் அரசு பள்ளிகளுக்கு சமீபகாலமாக ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

பலரும் தனியார் பள்ளிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற காரணத்தை காட்டி, பள்ளிகளை மூடுவது என்ற திட்டம் கொடுமையானது. பல லட்சம் ஏழை குடும்பங்கள் அரசு சேவைகளை நம்பி தான் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இந்த குழந்தைகள் மற்றவர்களை போல படிக்க அரசை தவிர யார் உதவ முடியும்? தனியார் பள்ளிகள் வளர வழி செய்வது முதல் தவறு. மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பதால் மூடுவதாக சொல்வது அடுத்த தவறு. இதன் விளைவுகளால் ஏழை, நடுத்தர குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும்.1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்க ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு, அங்கு நூலகத்தை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது சரியல்ல என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட காரணங்களால்  பள்ளிகளுக்கு மூடுவிழாநடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எல்லாமே தனியார்மயமாவது ஆபத்து. அதிலும் கல்வியை வர்த்தகமாக்கி, தனியார் வசம் விட்டால் என்னவெல்லாம் ஆபத்து என்பதை இப்போது அனுபவித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலை அரசு பள்ளிகளுக்கு ஏற்படும் என்றால்...?

2 comments:

  1. சரி தான் அருகில் உள்ள பள்ளி உடன் இணைப்பதே நலம் காலம் கடந்தாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு தேவையும் இருக்கும் இடம் நோக்கி வந்துகொண்டிருக்கும் digitalயுகத்திலும்,
      போக்குவரத்து விரிவடைந்து வரும் காலத்திலும்
      கல்விக்காக எதற்காக தொலைதூரம் செல்ல வேண்டும்...
      நாம்தான் அனைத்து விதமான வளர்ச்சியையும் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம் என்றால் நகர்புறங்களில் கிடைக்கும் அனைத்து கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு அனைத்தும் கிராமத்திலும் கொண்டுசெல்வது தானே உண்மையான வளர்ச்சியாகும்..
      தற்போது
      அபரிவிதமான எலெக்ட்ரானிக், எலெக்ட்ரானிக்மற்றும் digitalகாலத்தில்
      மொழி என்பது மனிதர்களின் தொடர்புகொள்ளும் நிலையில் எந்த பெரிய கஷ்டத்தையும் கொடுக்கப்போவதில்லை...
      எனவே தாய் மொழியில் சிந்தனை செய்தவர்களான
      கணித மேதை ராமானுஜர்,
      அறிவியல் மேதை சர்.சீ.வி.ராமன்,
      கல்வி மேதை
      ராதாகிருஷ்ணன்,
      வானவியல் மேதை
      அப்துல் கலாம்,
      மருத்துவ மேதை
      முத்துலெட்சுமி,
      சமூக மேதை
      அண்ணாத்துரை என பல்வேறு துறைகளில் சாதைப்படைத்தவர்களை நாம் பெற்றோம்..
      எனவே கல்வி என்பது சிந்திக்கும் முறையை எவ்வாறு சிந்திக்கத்தூண்டும் விதத்தில் கற்பிக்கின்றோமோ அதைப்பொறுத்துதான் அமையும்..
      மூன்று மொழி என்பது தேவையின் காரணமாக கற்றுக்கொள்ள வேண்டுமேத்தவிர கற்றால் இந்தியா சுற்றலாம் என்பது மன்னிக்கவும் மடத்தனமானது,தேவையில்லாத சுமையேற்றம் செய்யும் நடவடிக்கை.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி